hia Seeds Benefits in tamil 2026

சியா விதைகள் நன்மைகள், தீமைகள் மற்றும் அதனை பயன்படுத்தும் முறை – Chia Seeds Benefits in tamil 2026

சியா விதைகள் நன்மைகள், தீமைகள் மற்றும் அதனை பயன்படுத்தும் முறை – Chia Seeds Benefits in tamil 2026

முன்னுரை:

Chia Seeds Benefits in tamil 2026 – சியா விதிகள் என்பது ஒரு தாவரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய கருப்பு, வெள்ளை நிறம் கலந்த ஒரு வகையான விதை ஆகும். இதன் மருத்துவ குணத்தை அறிந்த நம் முன்னோர்கள் எண்ணற்ற வியாதிகளை குணப்படுத்தி வாழ்ந்து வந்துள்ளனர். அந்த வகையில் இன்று நாம் சியா விதைகளின் நன்மைகள், தீமைகள் மற்றும் அதனை எவ்வாறு பயன்படுத்துவது. மேலும் அது நம் உடலுக்கு எந்த வகையான நன்மைகள் கொடுக்கின்றது என்பது பற்றிய ஒரு விரிவான தகவலை இந்த பதிவில் பார்ப்போம்.

சியா விதையில் என்னென்ன சத்துக்கள் உள்ளது:

சியா விதையின் அறிவியல் பெயர் – சால்வியா ஹிஸ்பானிக்கா. பெரும்பாலும் இந்த விதைகளில், அதாவது ஒரு 10 கிராம் அளவுள்ள சியா விதைகளில் நார் சத்துக்கள் அதிகமாக காணப்படுவதால், இதனை புரதம் மற்றும் இரும்பு, கால்சியம், மெக்னீசியம் ஆகிய சத்து குறைபாடு இருப்பவர்கள் சாப்பிடுகிறார்கள்.

சியா விதையின் நன்மைகள்:

சியா விதைகள் ரோட்டு ஓரங்களில் கிடைக்கக்கூடிய பழச்சாறுகளின் மேலே ஊற்றி தருவார்கள். இது ஒரு விதமான வளவளப்பு தன்மையை கொண்டுள்ளது. மேலும், இதில் கொழுப்பு குறைக்கக்கூடிய புரதம் மற்றும் நார் சத்துக்கள் ஆகியவை அதிக அளவில் உள்ளது.

மிக முக்கியமாக ஒமேகா 3 என்ற கொழுப்பு இதில் அடங்கியுள்ளதால், குறிப்பாக உடல் எடை அதிகமாக உள்ளவர்கள், இதனை சாப்பிடும் பொழுது வயிறு பசி இல்லாத தன்மையை ஏற்படுத்துவதோடு தொப்பையை குறைக்கவும் உதவுகின்றது.

இன்னும் குறிப்பாக சொல்லப்போனால் இந்த சியா விதைகளில் அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் மற்றும் நார் சத்துக்கள் இருப்பதனால், அதனை நான் சாப்பிடும் பொழுது வயிறு நிரம்பிய மனநிறைவை நமக்கு தருகின்றது. இதன் மூலம் நாம் அதிக அளவு சாப்பிடும் சாப்பாடு தவிர்க்கப்படுவதால், உடல் எடை எளிமையாக குறைகின்றது.

மேலும் இது தவிர மற்றொரு சிறப்பு அம்சமாக ரத்தத்தில் உள்ள அக்கறையின் அளவை இது ஒழுங்குபடுத்த மிக முக்கிய காரணியாக அமைந்துள்ளது.

சியா விதைகளை சாப்பிடுவது எப்படி:

இந்த விதைகளை அப்படியே சாப்பிடுவதை விட அதனை ஊற வைக்கும் பொழுது நாம் எந்த திரவத்தில் ஊற வைக்கின்றோமோ அதன் சத்துக்களை முழுவதுமாக உறிஞ்சி கொஞ்சம் குண்டான வழவழப்பு தன்மையோடு இந்த விதைகள் மாறுகின்றது.

குறிப்பாக சொல்லப் போனால் இரவு தூங்கும் முன்பு பால் அல்லது தண்ணீரை சிறிதளவு எடுத்துக்கொண்டு அதனுடன் இந்த சியா விதைகளை கலந்து வைத்து விட வேண்டும். பின்னர் இந்த விதைகள் பால் அல்லது தண்ணீரை முழுவதுமாக உறிஞ்சி புரதம் நிறைந்த ஒரு குண்டான விதைகளாக மாறுகின்றது. இதனை நாம் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதன் மூலம் உடல் எடையை குறைக்க முடியும்.

நம் முன்னரே சொன்னது போல நம் உடலுக்கு தேவையான புரதம் மற்றும் நார் சத்துக்கள் இந்த விதைகளில் அடங்கியுள்ளதால் இது பசியின்மையை ஏற்படுத்துவதில்லை.

ஓட்ஸ் அல்லது தயிர் அல்லது சாலட்டுகளில் கலந்தும் இதனை சாப்பிடலாம். நீங்கள் சாப்பிடுவதற்கு முன்பு சிறிது நேரம் இந்த விதிகளை ஊற வைத்த பின்பு சாப்பிட்டால் தான் அதன் முழு பலனும் உங்களுக்கு கிடைக்கும்.

மேலும் இதனை நாம் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதன் மூலம், நம் உடலில் எண்ணற்ற மாற்றங்கள் ஏற்படுவதை நாம் கவனிக்க முடியும். குறிப்பாக சொல்லப்போனால், ஒரு நாள் முழுவதும் நீங்கள் உற்சாகமாக இருப்பதை உணர முடியும் மேலும் நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து உங்கள் உடலில் அப்படியே இருப்பதையும் நீங்கள் உணரலாம்.

காலையிலிருந்து எக்சர்சைஸ் செய்பவர்களுக்கு இந்த சியா விதை ஒரு மிகப்பெரிய நண்பனாக தெரிகின்றது. ஏனென்றால் இது உடலில் அதிகப்படியான நீரை இழப்பதை தவிர்த்து, ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மற்றும் புரதச்சத்து நார்ச்சத்துகள் ஆகியவை சேர்ந்து உடலில் உள்ள கொழுப்புகளை கரைத்து அதிகப்படியான ஆற்றலை உடலுக்கு தருகின்றது.

ஒருவேளை நீங்கள் மாலை நேரத்திலும் இந்த விதைகளை சாப்பிட்டீர்கள் என்றால் உங்களுடைய செரிமானத்திற்கு இந்த விதைகள் வித்திடுகின்றது. அதாவது இரவு நேரத்தில் நீங்கள் அதிக அளவு சாப்பிடும் சாப்பாட்டை தவிர்க்கின்றது. இரவு முழுவதும் ஒரு முழுமையான சாப்பாடு சாப்பிட்டது போன்று இது உங்களை உணர செய்கின்றது.

சியா விதைகளில் உள்ள தீமைகள்:

என்னதான் சியா விதைகள் நம்முடைய உடலுக்கு எண்ணற்ற நன்மைகள் கொடுத்தாலும், நாம் இதில் இருக்கக்கூடிய தீமைகளை பற்றி அறிந்து கொள்வது மிகவும் நல்லது.

ஒவ்வாமை பிரச்சினை உள்ளவர்கள் இந்த சியா விதைகளை உடல் எடை குறைப்பதற்காக பயன்படுத்தும் பொழுது அவர்களுக்கு வேறு ஒரு நோய்கள் உருவாவதையும் ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த சியா விதைகள் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவுகளை உறிஞ்சி எடுக்கின்றது ஏனென்றால் இது நார்ச்சத்து மற்றும் சர்க்கரை அளவை குறைப்பதால், சர்க்கரை சத்து குறைவாக உள்ளவர்கள் இதனை சாப்பிடுவது பரிந்துரைக்கப்படவில்லை.

மேலும் உடலில் ரத்தத்தின் அளவு குறைவாக இருப்பவர்கள் சியா விதைகளை சாப்பிடும் பொழுது, அதில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் சேர்ந்து ரத்தத்தை உறிஞ்சி, அதாவது ரத்தத்தில் உள்ள சர்க்கரையை உறிஞ்சி ரத்தத்தின் அளவை குறைத்து விடுகின்றன.

வயிறு சம்பந்தமான பிரச்சினைகள் உள்ளவர்கள் இந்த சியா விதையை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. ஏனென்றால் இதில் உள்ள பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் நாள் முழுவதும் உடலில் பசியின்மையை ஏற்படுகின்றது அதன் மூலம் நாம் தண்ணீர் குடிக்க முடியாத சூழ்நிலைகளை கூட ஏற்படுத்த உள்ளதாக இருக்கின்றது.

Read Also : Marunthu

சியா விதைகள் எங்கு கிடைக்கும்:

இதனைப் பயன்படுத்த வேண்டும் என்றால் இது நாம் விளைவிக்க முடியாது ஏனென்றால் இது வெளிநாடுகளில் கிடைக்கக்கூடிய ஒரு பொருளாகும். ஆனால் இதனை நாம் எளிமையாக வாங்கலாம். நமக்கு அருகில் உள்ள நாட்டு மருந்து கடைகளில் இது மிக எளிமையாக கிடைக்கும்.

மேலும் இது அமேசான், பிளிப்கார்ட், மீசோ ஆகிய தளங்களிலும் எளிமையாக வீட்டில் இருந்தபடியே ஆர்டர் செய்து வாங்கலாம். இதன் விளையும் 100லிருந்து 200 ரூபாய்க்குள் அந்த விதையின் தரத்தை பொறுத்து கிடைக்கும்.

நகர் பகுதியில் வசிப்பவர்கள் இன்னும் எளிமையாக அருகில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு சென்றாலே அனைத்து சூப்பர் மார்க்கெட்டிலும் இது கிடைக்க கூடியது.

முடிவுரை:

இந்த சியா விதைகள் நம்முடைய உடலுக்கு தேவைப்படும் அத்யாவசிய தேவைகளான புரதம், கால்சியம், இரும்பு சத்து ஆகியவற்றை அதிகரிக்கிறது. இருப்பினும் நம் உடலில் இருக்கக்கூடிய வியாதிகளால் இது தீமைகளையும் ஏற்படுத்தக் கூடியது, என்பதை பற்றி இப்பொழுது நீங்கள் தெரிந்து கொண்டிருப்பீர்கள்.

அதனால் இதனை சாப்பிடுவதற்கு முன்பு உங்கள் உடல்நிலை எவ்வாறு இருக்கின்றது என்பதை பொறுத்து அதனை நீங்கள் பயன்படுத்துவது உங்கள் உடல் நலத்திற்கு சிறந்த மருந்தாக இது அமையும்.

Read Also: மூக்கிரட்டை கீரையின் நன்மைகள், தீமைகள் மற்றும் அதனை சாப்பிடுவது எப்படி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *