Forehead Hair Growth in Tamil

முன் நெற்றியில் முடி வளர சில டிப்ஸ் – Forehead Hair Growth in Tamil

முன் நெற்றியில் முடி வளர சில டிப்ஸ் – Forehead Hair Growth in Tamil

Forehead Hair Growth in Tamil – முன் நெற்றியில் முடி வளர சில டிப்ஸ் – பெண்கள் என்றாலே பொதுவாக தங்களுடைய அழகை பாதுகாப்பதில் முழு கவனம் கொள்வார்கள். அந்த வகையில் பெண்கள் தங்கள் முடிகளுக்கு அதிகப்படியான கவனம் செலுத்துவார்கள். தற்போதைய காலகட்டத்தில் வாழும் பெண்களுக்கு கண்ட கண்ட ஆயில்களை பயன்படுத்துவதால் முடி கொட்டுதல் மற்றும் முடி அடர்த்தி குறைதல் ஆகிய பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

மேலும் விரிவாக சொல்லப்போனால் முடி வளர்ச்சியின்மை மற்றும் இளநரை ஆகியவையும் மிகப்பெரிய முக்கிய பிரச்சினையாக கருதப்படுகின்றது. அந்த வகையில் இந்த பதிவில் நாம் முன்னேற்றியில் முடி வளர சில டிப்ஸ் பற்றி பார்ப்போம்.

பெண்களுக்கு முடியின் வளர்ச்சி குறைவது ஏன் :

பொதுவாக பெண்களுக்கு முடி உதிரும் பிரச்சனையை முன்கூட்டியே ஒரு சில அறிகுறிகளை வைத்து நாம் தெரிந்து கொள்ளலாம். ஒருவேளை நான் சொல்ல போகும் இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால், கூடுதல் கவனம் செலுத்தி அதனை சரி செய்து முன் நெற்றியில் வழுக்கை விழும் பிரச்சனையை நாம் சரி செய்ய முடியும்.

அதாவது ஆரம்பத்தில் அதிகப்படியான முடிகள் உதிர்வதை நீங்கள் உணரலாம், குறிப்பாக சொல்லப்போனால் ஷாம்பு போட்டு குளிக்கும் பொழுது அதிகப்படியான மூடிகள் கையோடு வருவதை நீங்கள் பார்த்தீர்கள் என்றால், அது நிச்சயம் உங்களுக்கு முன் தலையில் பழுக்கை விழ ஆரம்பிக்கிறது என்று அர்த்தம். மேலும் தினமும் நீங்கள் தலை சீவும் பொழுது முடி சிக்கு இல்லாமல் நார்மலாக தலை சீவினால் அது முடி நன்றாக இருப்பதை உங்களுக்கு காட்டும்.

முடி உதிர்வை தடுப்பதற்கு சில வழிமுறைகள்:

முடி உதிர்வை கட்டுப்படுத்தினாலே போதும் முன் தலையில் வழுக்கை விழுதல் மற்றும் முடிகளின் அடர்த்தி குறைவு ஆகிய பிரச்சினைகளை எளிமையாக நாம் கட்டுப்படுத்தலாம். இதற்கு நான் செய்யப்போவது மிகவும் சுலபமான மற்றும் வீட்டிலேயே இயற்கை முறையில் உருவாக்கக்கூடிய என்னை ஆகும்.

இதற்குத் தேவையான மூலப்பொருள்களும் நமக்கு எளிமையாக கிடைக்கக் கூடியது. ஆகவே இந்த எண்ணெயை தயாரிப்பது மிகவும் சுலபம். இப்பொழுது நாம் சுமார் இரண்டு வாரத்திற்கு தேவைப்படும் எண்ணையை எப்படி தயாரிக்கலாம் என்பதை பற்றி சுருக்கமாக பார்க்கலாம்.

தேங்காய் எண்ணெய் 50 மில்லியும் மற்றும் ஆலிவ் எண்ணெய் 50 மில்லியும் வெந்தயம், கருஞ்சீரகம் ஆகியவை இரண்டு ஸ்பூன்களும் எடுத்துக் கொள்ளுங்கள். கருவேப்பிலையை ஒரு அரை கப் அளவுக்கு எடுத்துக்கொண்டு அதனை கொஞ்சம் உலர்த்திக் கொள்ளுங்கள்.

இப்பொழுது கருவேப்பிலை கருஞ்சீரகம் மற்றும் வெந்தயம் ஆகிய மூன்றையும் ஒன்றாக ஒரு மிக்ஸியில் அரைத்து கொள்ளுங்கள். பின்பு தேங்காய் எண்ணெய் மற்றும் ஆளி விண்ணியை இரண்டையும் ஒன்றாக ஊற்றி கலந்து இந்த பொடியை அந்த எண்ணெயில் சேர்த்து கலக்குங்கள், பின்பு ஒரு பாத்திரத்தில் இந்த எண்ணெயை ஊற்றி கொஞ்சம் கொதிநிலை வரும் வரை சூடாக்குங்கள். சிறிது சூடானவுடன் அந்த எண்ணையை ஒரு சிறிய பாத்திரத்தில் காற்று புகாதபடி அடைத்து வையுங்கள். இந்த எண்ணையை நீங்கள் தினமும் பூசி வந்தால் உங்களுக்கு முடி உதிர்வது குறையும் மற்றும் முடி அடர்த்தியாகவும் வளரும்.

எண்ணெயில் உள்ள சத்துக்கள் – Forehead Hair Growth in Tamil:

தேங்காய் எண்ணெய் மற்றும் ஹாலிவுட் எண்ணெய் இவை இரண்டுமே முடி வளர்ச்சிக்கு அதிக ஊட்டம் கொடுத்து முடியை நன்றாக வளர செய்யும். மேலும் குறிப்பாக சொல்லப் போனால் இந்த இரண்டு எண்ணெய்களை ஒன்றாக கலக்கும் பொழுது வைட்டமின் ஈ மற்றும் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் ஒன்றாக இணைகின்றது இவை தலைமுடியில் உள்ள அதாவது தலை முடி வளரும் இடத்தில் சென்று அவைகளின் வளர்ச்சியை நன்கு அதிகரிக்க செய்கின்றது.

மேலும் இந்த எண்ணெயை தினம் தோறும் பயன்படுத்துவது மூலம் இளநரை என்று சொல்லப்படுகின்ற நரைச்ச முடி உண்டாவதையும் தடுக்கலாம். மேலும் முடிகளும் கருகருவென்று அடர்த்தியாக வளர இந்த எண்ணெய் உங்களுக்கு உதவி செய்யும். மேலும் வெயில் காலத்தில் இந்த எண்ணெயை நீங்கள் பயன்படுத்துவதால் பொதுவாக வெந்தயம் குளிர்ச்சி ஊட்டக்கூடிய பொருள் அதனால் உங்கள் தலையும் மிகவும் குளிர்ச்சியாக இருக்கும்.

இந்த எண்ணையை பயன்படுத்துவதற்கும் ஒரு சில டிப்ஸ் உள்ளது. அதாவது நாம் இரவு தூங்குவதற்கு முன்பு தலைமுடியை நன்றாக சிக்கில்லாமல் சீவி கொள்ள வேண்டும். பின்ன உள்ளங்கையில் சிறிது அளவு இந்த எண்ணெயை எடுத்து தலையில் மசாஜ் செய்வது போன்று தேய்த்து விட வேண்டும். மேலும் குறிப்பாக உச்சந்தலையில் நன்றாக தேய்க்கும் பொழுது உடலில் ஏற்படக்கூடிய சூடுகள் மறைந்து போவதை நீங்கள் உணர்வீர்கள்.

மறுநாள் காலையில் நீங்கள் எழுந்தவுடன் செய்ய வேண்டியது வெந்நீர் வைத்துக் கொள்ளுங்கள் பின்பு ஒரு ஷாம்பு போட்டு உங்கள் முடியை அலசுங்கள், இவ்வாறு நீங்கள் தொடர்ச்சியாக ஒரு மாதத்திற்கு செய்வதன் மூலம் முதலில் முன்புற நெற்றியில் முடி உதிர்வது படிப்படியாக குறையும் மேலும் முடி வளர்ச்சியும் அடர்த்தியாக இருக்கும்.

மேலும் முடி உதிர்வே கட்டுப்படுத்த சில டிப்ஸ் உங்களுக்காக:

1. நம் தலை முடியை மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியமான ஒன்று, எனவே நாம் வாரத்திற்கு மூன்று முறை யாவது ஷாம்பு அல்லது சிகைக்காய் போட்டு குளிப்பது உங்களின் முடிக்கு சக்தியை கூட்டக்கூடியதாகும்.
2. மேலும் முடி உதிர்வதை கட்டுப்படுத்துவதற்கு நம் உணவிலும் சிறு மாற்றங்கள் தேவைப்படுகின்றது. ஏனென்றால் நம் உடலில் இருக்கக்கூடிய இரும்புச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் அவைகள் குறைவதால் முடி உதிர்தல் ஏற்படுகின்றது. இவ்வாறு சத்துக்கள் குறைவதால் முன்னேற்றியில் முடிகள் குறைந்து வழுக்கை தலை போன்று ஏற்படுகின்றது.
3. நம்முடைய முகம் அழகாக வைத்துக் கொள்ள முதலில் நம் முடியை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நம் முன்னோர்கள் கூறுவார்கள். இது போன்ற வீட்டில் கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்து நம் முன்னோர்கள் முடிகளை நீளமாகவும் அடர்த்தியாகவும் வைத்திருந்தார்கள். எனவே நாம் உணவு கட்டுப்பாடு என்பது முக்கியமாக ஒன்றாக இருக்கின்றது அது மட்டுமல்லாமல் நம் உடலுக்கு தேவையான சத்துக்களை ஏற்படக்கூடிய உணவுகளை மட்டும் உண்ணுங்கள்.

முன் நெற்றியில் முடி வளர சில டிப்ஸ் – Forehead Hair Growth in Tamil

நம்முடைய முன் தலையை கவனித்தால் முடியின் வளர்ச்சி குறைந்து அவை சொட்டை ஏற்படும் போன்று நமக்கு தோன்றும். இவ்வாறு இருக்கும் பொழுது நமக்கு மன வலிமை குறைந்து விடும். எந்த ஒரு மனிதனுக்கு முதலில் மனசு சரியில்லையோ அவர்களுக்கு முடி கொட்டும் பிரச்சினை அதிகமாக இருக்கும் என்பார்கள். எனவே நாம் முன் நெற்றியில் முடி வளர்வதற்கு மட்டும் சில டிப்ஸ்களை இப்பொழுது பார்ப்போம்.

முன்ன நெற்றியில் மட்டும் முடி அதிகமாக வளர வேண்டும் என்றால் நான் கீழே சொல்லக்கூடிய இந்த மூன்று வகையான எண்ணெய்களை பொன் ஒன்றாக பயன்படுத்திப் பாருங்கள் முதலாவது தேங்காய் எண்ணெய் இரண்டாவது பாதாம் எண்ணெய் மூன்றாவது லாவண்டர் எண்ணெய். இவை பயன்படுத்தும் முறையும் மிகவும் எளிது இந்த எண்ணெய்களை நன்றாக சூடாக்கி ஒரு சிறிய கண்ணாடி பாட்டிலில் அடைத்துக் கொள்ளுங்கள் அவைகளை முன் நெற்றியில் மசாஜ் செய்வது போன்று மெதுவாக பூசி விடுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் ரத்த ஓட்டம் அதிகமாகி முடியும் வளர்ச்சி ஏற்படுவதையும் அதிகப்படுத்துகின்றது.

மேலும் விளக்கெண்ணை கூட பல பேர் பயன்படுத்தி இழந்த முடியை மீட்டெடுத்து இருக்கின்றார்கள். இவைகளை குறுகிய நாட்கள் பயன்படுத்தி விட்டு விடாமல் அதிக நாட்கள் பயன்படுத்துவதையே பலன் உங்களுக்கு கிட்டும், குறிப்பாக சொல்லப்போனால் இந்த விளக்கெண்ணையை சுமார் ஒரு கை அளவு எடுத்து தலைமுடியில் கிச்சன் தலையில் தேய்த்துக்கொண்டு பின்பு ஒரு மணி நேரத்திற்கு தலையை ஊற வைக்க வேண்டும் அவ்வாறு இருக்கும் பொழுதே இடையில் தலையை மசாஜ் செய்வது போன்ற அழுத்தி அழுத்தி விட வேண்டும். பின்பு ஷாம்பு போட்டு குளித்துக் கொள்ளுங்கள் இவ்வாறு செய்வதன் மூலம் உங்களுக்கு முன்னிற்றியில் முடி வளர்ச்சி ஏற்படுவதை நீங்கள் உணரலாம்.

நம் உடலுக்கு தேவையான இரும்புச்சத்து கடலைப்பருப்பில் அதிக அளவு உள்ளது எனவே நாம் கடலைப்பருப்பை சிறிதளவு தினம் தரும் சாப்பிடுவதன் மூலம் உடலில் இரும்பு சத்துக்கள் பலம் அதிகரிக்கிறது இதனால் முடியின் அந்த வேரின் சக்தி அதிகரிப்போடு முடி உதிர்வும் காலப்போக்கில் குறைந்து முடி அடர்த்தியாகவும் வளரும்.

Read Also: மூக்கிரட்டை கீரையின் நன்மைகள், தீமைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *