மூக்கிரட்டை கீரையின் நன்மைகள், தீமைகள் மற்றும் அதனை சாப்பிடுவது எப்படி

மூக்கிரட்டை கீரையின் நன்மைகள், தீமைகள் மற்றும் அதனை சாப்பிடுவது எப்படி

மூக்கிரட்டை கீரையின் நன்மைகள், தீமைகள் மற்றும் அதனை சாப்பிடுவது எப்படி

மூக்கிரட்டை கீரை என்றால் என்ன:

மூக்கிரட்டை கீரையின் நன்மைகள், தீமைகள் மற்றும் அதனை சாப்பிடுவது எப்படி – இது ஒரு சாதாரண செடி வகையை சார்ந்தது. உன் வீட்டை சுற்றி எங்கும் காணக்கூடிய ஒரு சிறிய சரிதான் இது. அனைவராலும் கலை செடி போன்று பிடுங்கி எறியக்கூடிய சரியாக பார்க்கப்பட்டாலும் இது மனிதர்களுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதமாக கருதப்படுகின்றது. ஏனென்றால் இந்த செடியின் மூலம் மனிதர்களுக்கு ஏற்படும் எண்ணற்ற நோய்களை வெகு எளிதாக விரட்டி அடிக்க முடியும்.

பொதுவாக கிராமப்புறங்களில் சாதாரண இடங்களில் கூட பார்க்க முடியும். பெரும்பாலானூர் இதனை கண்டு கொள்வதில்லை, ஒரு நோய் ஏற்பட்டால் தான் அந்த நோயின் முக்கியத்துவத்தை அறிந்து நாம் மூலிகை மருந்துகளை தேடுவோம்.

அந்த வகையில் இந்த மூக்கிரட்டை கீரையின் பயன் மிகவும் அதிகமானது அதனை பற்றி அறிந்தோர் அதனை என்றும் பிடுங்கி எறிய மாட்டார். சரி இனி நாம் மூக்கிரட்டை கீரையில் உள்ள மருத்துவ குணங்கள் என்னென்ன என்பதை பற்றி தெளிவாக பார்ப்போம்.

மூக்கிரட்டை கீரையின் மருத்துவ குணங்கள்:

* இன்று உலக நாடுகளில் பெரும்பாலும் அனைவருக்கும் ஏற்படக்கூடிய சிறுநீரக செயல்பாட்டு நோயை ஆரம்பத்தில் கண்டறிந்து விட்டால் மிக சுலபமாக இந்த மூக்கிரட்டை கீரையை உண்டு அதனை நாம் விரட்டி அடிக்கலாம்.
* மேலும் சொல்லப்போனால் கல்லீரல் சார்ந்த பிரச்சினைகளையும் இது சரி செய்கின்றது. இந்தக் கீரையின் சாறு மற்றும் இந்த கீரையை நாம் சாப்பிடுவதன் மூலம் நம் உடல் உறுப்புகளில் உள்ள கழிவுகளை வெளியேற்றி ரத்தத்தை சுத்தம் செய்கின்றது.
* உடலில் ஏற்படக்கூடிய கொடிய நோயான புற்றுநோய் எனப்படும் உயிர்கொல்லி நோயை இது முற்றிலும் எதிர்க்கக்கூடிய எதிரியாக உள்ளது. இதனை நான் சாப்பிடுவதன் மூலம் நம் உடலில் உள்ள திசுக்களின் பலத்தை அதிகரித்து திசுக்கள் முதிர்ச்சி அடையாமல் இளமையுடன் இருக்க வழிவகை செய்கின்றது.
* மேலும் இது உடலில் ஏற்படக்கூடிய பல்வேறு வகையான அசதிகள் மற்றும் சுறுசுறுப்பு ஆகியவற்ற நீக்கி உடலுக்கு தெம்பு கொடுக்கின்றது.
* மேலும் மூக்கிரட்டையின் இலைகளை சமைத்து கீரையாக சாப்பிட்டு வந்தால் நம் உடலில் ஏற்படும் சுவாச சம்பந்தமான பிரச்சினைகள் வெகு சீக்கிரம் சரியாயின்றது.

மூக்கிரட்டை கீரை சூப்பு செய்வது எப்படி என்று பார்ப்போம்:

பொதுவாக சிறுநீரக பிரச்சனைகள் அதிகமாக உள்ளவர்கள் இந்த மூக்கிரட்டை கீரையை சாப்பிட சொல்வார்கள் குறிப்பாக சொல்ல போனால் அந்தக் கீரை அவித்தோ அல்லது கீரையில் வேக வைத்து வரக்கூடிய தண்ணீரை சாப்பிட்டால் சிறுநீரக சம்பந்தமான பிரச்சினைகள் குறைந்து வருவதை பார்க்கலாம்.

மேலும் சிறுநீரக தொற்றின் முக்கிய எதிரியாக இருக்கக்கூடிய யூரியா மற்றும் கிரியாட்டின் அளவுகளை இது குறைத்து சமநிலையில் வைக்க உதவுகின்றது. மேலும் சிறுநீரக கற்கள் தோன்றுவதையும் இது அடியோடு அளிக்கின்றது.

தேவையான பொருட்கள்:

1. மூக்கிரட்டை கீரை 200 கிராம்.
2. உப்பு மற்றும் மஞ்சள் தூள் அரை ஸ்பூன்
3. சீரகப்பொடி மிளகு பொடி ஆகியவை அரை ஸ்பூன்
4. கடைசியாக பூண்டு ஒரு ஐந்து பொருட்கள் எடுத்துக் கொள்ளுங்கள்.

முதலில் மூக்கிரட்டை கீரையை நன்றாக தண்ணீரில் கழுவி கொள்ளுங்கள் பின்னர் அதனை ஒரு கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க வையுங்கள். நன்றாக கொதிக்கும் நேரத்தில் நம்மிடம் உள்ள பொருள்களான உப்பு மஞ்சள் தூள், மிளகு, சீரகம், பூண்டு அயோவற்றையும் சேர்த்து நன்றாக கொதிக்க விடுங்கள். சிறு தண்ணீர் வற்றியவுடன் கீரையை நன்றாக வாசித்து கூல் போன்ற ஆக்குங்கள். அவ்வளவுதான் மூக்கிரட்டை சூப் இப்பொழுது தயார் பண்ணி விட்டீர்கள்.

மூக்கிரட்டை கீரை பொடி செய்வது எப்படி:

மூக்கிரட்டை கீரையை ஒரு 800 கிராம் அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள். முதலில் கீரையை நன்றாக கழுவி பின்பு வெயிலில் உலர்த்தி வையுங்கள்.

அந்த இலைகள் காய்ந்தவுடன் அதனை பொடியாக அம்மியில் வைத்து பிடித்தோ அல்லது மிக்ஸியில் அரைத்தோ வைத்துக் கொள்ளலாம். இதன் செயல்முறை மிகவும் எளிமையானது தான்.

இவ்வாறு செய்யக்கூடிய பொடியை ஒரு காற்று போகாத பிளாஸ்டிக் டப்பாவில் அல்லது ஒரு பாத்திரத்தில் போட்டு அடைத்து வைத்துக் கொள்வது அதன் சக்தியை வெளியேற்றாமல் இருக்க உதவும். இதனை சாப்பிடும் முறை மிகவும் எளிதானது, ஒரு டம்ளர் அளவு தண்ணீரை கொதிக்க வைத்து, கொதிக்கும் தண்ணீரில் வைத்துள்ள பொடியை அறையில் இருந்து ஒரு ஸ்பூன் அளவு கொதிக்க வைத்து பின்புறம் தண்ணீரை குடிக்க வேண்டும்.

இதன் மூலம் கிட்னியின் செயல்பாடுகள் அதிபர் ரத்தத்தில் உள்ள கழிவு பொருட்களையும் நீக்குகின்றது.

மிக முக்கிய குறிப்பு: இது கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள் அல்லது வேறு சில உடல் பிரச்சினைகள் இருப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனை இன்றி இந்த பொடியை பயன்படுத்தக் கூடாது.

மற்றவர்கள் சாதாரணமாக இதனை உபயோகிக்கலாம். மேலும் எளிமையாக நாட்டு மருந்து கடைகளில் மூக்கிரட்டை கீரை பொடி என்று கேட்டாலே கிடைக்கும் அதனையும் வாங்கி சாப்பிடலாம்.

சரி கடைசியாக நாம் இப்பொழுது மூக்கிரட்டை கீரையில் மருத்துவ குணங்கள் பற்றி சிறிய வரிகளில் பார்ப்போம்.

நாம் முன்னரே சொன்னது போன்று இது ஒரு சிறந்த அருகில் கிடைக்கக்கூடிய ஒரு எளிமையான மூலிகை வகையை சார்ந்தது. இது குறிப்பாக செயலிழந்து சிறுநீரகத்தை நன்றாக வேலை செய்ய வைக்கக்கூடிய ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதமாக கருதப்படுகின்றது.

மூக்கிரட்டை கீரையை பொறுத்தவரை அதன் தலை வேர் மற்றும் இலைகள் அனைத்தையும் உண்பதற்கு ஏற்றவை. அதனை அந்த ரெசிபிகளுக்கு ஏற்றவாறு நாம் மாற்றி அமைத்து உண்ணலாம்.

1. மூக்கிரட்டை கீரையை ஒரு நாள் விட்டு ஒரு நாள் தினமும் காலையில், 100 கிராம் அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள் அதனை சுடுதண்ணீரில் இரண்டு டம்ளர் ஊற்றி, அதனை ஒரு டம்ளர் அளவிற்கு வரும் வரை சுண்ட காய்ச்சி வேண்டும் பின்னர் அந்த தண்ணீரை அப்படியே குடிக்க வேண்டும். இதை செய்ததற்கு பின்பு அரை மணி நேரம் கழித்து உணவு உட்கொள்ளலாம்.
2. மேலும் இது சிறுநீரக கல், பித்தப்பை கல் ஆகிய பிரச்சினைகளை எளிமையாக நீக்குகின்றது.
3. மேலும் இதனை வாரத்திற்கு இரண்டு முறை எடுத்துக் கொள்வதன் மூலம் நமது மூளைக்கு சிறந்த நினைவூட்டல் திறனை அதிகப்படுத்துவதை விட மற்றும் சுறுசுறுப்பு கருணையும் அதிகப்படுத்துகின்றது.
4. மேலும் இது செரிமான கோளாறு மலச்சிக்கல் மற்றும் சருமத்தில் ஏற்படக்கூடிய எண்ணற்ற பிரச்சனைகளை நீக்க இது உதவுகின்றது.
5. மேலும் இது ரத்தத்தில் தேங்கியுள்ள கழிவுகளை அகற்றுவதற்கு உதவுகின்றது.

Read Also : marunthu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *