உடலில் பித்தம் அதிகமானால் ஏற்படும் அறிகுறிகள்

நம்முடைய உடலில் பித்தம் அதிகமானால் ஏற்படும் அறிகுறிகள் என்னென்ன

நம்முடைய உடலில் பித்தம் அதிகமானால் ஏற்படும் அறிகுறிகள் என்னென்ன

வாசகர்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம். இந்த பதிவில் நான் உங்களுக்கு சுத்தம் அதிகமானால் நம்முடைய உடலில் என்னென்ன அறிகுறிகள் ஏற்படும் என்பதை பற்றின தெளிவான விளக்கத்தை நான் சொல்லப்போகிறேன். இது போன்ற மேலும் பல தகவல்களுக்கு நம்முடைய வலைதளத்தை நாள்தோறும் பின்பற்றுங்கள்.

பித்தம் என்றால் என்ன:

பித்தம் என்பது கல்லீரலில் உற்பத்தி செய்யப்படும் ஒரு வகையான திரவம் ஆகும். இன்னும் விரிவாக சொல்லப்போனால் கல்லீரலால் உருவாக்கப்பட்டு அதனை இத்தபையில் சேமிக்கப்படும் ஒரு விதமான மஞ்சள் மற்றும் பச்சை நிற செரிமான திரவம் என்று வைத்துக் கொள்ளலாம்.
இந்த திரவத்தின் வேலையை கேட்டால் நீங்கள் மிகவும் ஆச்சரியப்படுவீர்கள். அதாவது நம்முடைய உடலில் இருக்கும் கொழுப்பு சத்துக்களை உடல் முழுவதும் சென்றடைய இது உதவுகிறது. இதுதான் பித்தம் என்று அழைக்கப்படுகிறது.

அதேபோன்று மேலும் நம்முடைய உடல்களில் இருக்கும் கொழுப்புகள் மற்றும் கொழுப்பில் இருக்கக் கூடிய வைட்டமின்கள் ஆகியவை செரிமானம் அடைவதற்கு மிகவும் உதவியாக இருக்கின்றது இந்த பித்தம். நம் முன்னரே சொன்னது போல ஒரு பிசுபிசுப்பான பச்சை நிற அல்லது அதில் மஞ்சள் கலந்து கொண்டு ஒரு திரவம் என்பதால் இது அதிக அளவில் இருந்தால் நம்முடைய உடலுக்கு பல்வேறு வகையான பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

பித்தம் செய்யக்கூடிய வேலைகள் விரிவான விளக்கம்:

அதாவது நாம் சாப்பிடக்கூடிய உணவுப் பொருள்களில் இருந்து நம்முடைய உடலுக்கு தேவையான கொழுப்பு சத்துக்கள் தனியாக இருக்கும். இந்த சத்துக்கள் அனைத்தும் உடலில் அப்படியே சேர்ந்தால் பெரும் பிரச்சனைகள் ஏற்படுத்தும் அதனால் பித்தப்பை ஆனது அந்த கொழுப்புகளை சிறுசிறு துண்டுகளாக உடைத்து அதனை நம் உடல் ஏற்றுக்கொள்வதற்கு உதவியாக உள்ளது.

மேலும் இவை வைட்டமின் ஏ, டி, இ, கே ஆகியவையும் சேர்த்து நம் உடல் ஏற்று கொள்வதற்கு உதவுகின்றது.

உடலில் பித்தம் அதிகரிப்பதால் ஏற்படும் ஒரு சில அறிகுறிகளை பற்றி இப்பொழுது நாம் பார்ப்போம்.

* நாம் எப்போதும் இல்லாத அளவிற்கு நார்மலாக இருக்கும் பொழுது கண் எரிச்சல் ஏற்படும்.
* அதேபோன்று நெஞ்சு பகுதியில் ஒரு விதமான எரிச்சல்களும் ஏற்படும்.
* மேலும் இரவில் தூங்கும் பொழுது உடலின் வெப்பநிலை வழக்கத்தை விட அதிகமாக இருப்பதை உணரலாம்.
* மேலும் மறதி எனப்படும், அதாவது சிறு சிறு விஷயங்களை கூட நாம் மறந்து போவதில் ஏற்படலாம்.
* ஒரு சில சமயங்களில் இதயத்துடிப்பு வேகமாக ஏற்படும் இதனால் உடல் முழுவதும் படபடப்பு அதிகமாகும்.
* மேலும் வாய் புண் மற்றும் வாய் எரிச்சல் ஆயாவும் இருக்கக் கூடும்.

சரி இப்பொழுது நாம் பித்தம் அதிகரிப்பதால் ஏற்படும் அறிகுறிகள் என்னென்ன என்பதை பற்றி பார்த்தோம் இனி நாம் இந்த பித்தம் எதனால் நமக்கு அதிகமாக ஆகின்றது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

பித்தம் அதிகமாவதற்கு வரும் காரணங்கள்:

நண்பர்களே பொதுவாக டீ, காப்பி மற்றும் மதுபானம் இவை குடிக்கும் மக்களுக்கு பெரும்பாலாக இந்த பிரச்சனைகள் ஏற்படுகின்றது.

இதற்காக இவை சாப்பிடாமல் இருப்பது நல்லது என்று யாரும் சொல்லவில்லை. அவைகளை அளவோடு சாப்பிட வேண்டும் இல்லை என்றால் இது போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

பொதுவாகவே ஒரு சிலர் இருப்பார்கள் அவர்கள் பெயர்தான் டி அடிக்ட் என்று சொல்வார்கள். அதாவது அவர்களால் டீ குடிக்காமல் இருக்கவே முடியாது. ஒரு நாளைக்கு ஐந்து முதல் 8 டீ வரை பார்க்கும் இடங்களில் எல்லாம் குடிப்பார்கள்.

இவர்களைப் போன்றவர்களுக்கு பெரும்பாலும் இந்த பித்தம் அதிகரிப்பது ஏற்படுகின்றது.

மேலும் இரவில் அதிகமாக தூங்காமல், இரவு வேலை செய்பவர்களும். தொலைபேசியை அதிகமாக பயன்படுத்தி வீடியோக்களை பார்ப்பவர்களுக்கும் இந்த வியாதி ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.

கடைசியாக நம் உடலில் வெப்பத்தை அதிகரிக்க கூடிய பொருட்களை அதிக அளவு சாப்பிடுவதால் இந்த பிரச்சனை ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.

சரி இப்பொழுது நாம் பித்தம் எதனால் ஏற்படுகிறது அதனால் ஏற்படக்கூடிய அறிகுறிகள் என்னென்ன என்பதை பற்றி தெளிவாக பார்த்தோம். இனி நாம் அந்த பித்தத்தை எவ்வாறு குறைத்து நம் உடலில் சம அளவு வைத்துக் கொள்வது என்பதை பற்றி தெளிவாக பார்ப்போம்.

பித்தம் குறைப்பதற்கான சில எளிமையான வழிமுறைகள்:

நம் வீட்டில் இருக்கக்கூடிய சிறு சிறு பொருட்களை நம் உடலை பாதுகாக்கின்ற மிகப்பெரிய கருவியாக இருக்கின்றது. அந்த வகையில் சிறிதளவு இஞ்சி கற்கண்டு சீரகம் ஆகியவை பொடியாக செய்து ஒரு டம்ளர் பாலுடன் அந்த பொடியை ஒரு சிட்டிகை அளவு கலந்து காலை மாலை என்று இரண்டு வேளைகளிலும் குடித்து வர வேண்டும்.

மேலும் காய்கறி வகைகளை பொறுத்தவரையில் வெண்பூசணியை நாம் உணவில் அதிக அளவு சேர்த்துக் கொள்வதால் இந்த பித்தம் பிரச்சனை முழுமையாக சரிவடையும்.

முக்கியமான குறிப்புகள்:

* இந்த அறிகுறிகள் அதிகமாக இருந்தால் உடனே மருத்துவரை அணுகி முறையான சிகிச்சை பெற வேண்டும்.
* மேலே சொன்ன குறைக்கும் வழிமுறைகளை ஒன்று அல்லது இரண்டு நாள் முயற்சி செய்துவிட்டு அவை பலன் அளிக்கவில்லை என்றால் மருத்துவர் அணுகுவது மிகவும் சரியான வழி.
* இது சரி செய்யக்கூடிய பிரச்சனை என்பதால் யாரும் கவலை கொள்ள தேவையில்லை.

நண்பர்களே எம்முடைய வலைதளத்தில் உங்களுக்கு மிக முக்கியமான தகவல்களை எல்லாம் நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றோம் எங்களை மேலும் மேலும் ஊக்கப்படுத்தி இது போன்ற பதிவுகளை படித்துவிட்டு கீழே கமெண்ட் செய்யுமாறு உங்களை வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கின்றோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *